FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

லாலு, தேஜஸ்விக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதியுங்கள்: ஐஆா்சிடிசி ஊழல் வழக்கில் தில்லி நீதிமன்றம் உத்தரவு

லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் 6 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளைப் பதியும்படி தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

11 செப்டம்பர் 2026, 7:32 am IST
தில்லி உயர்நீதிமன்றம்
பகிர்:

ஐஆா்சிடிசி ஊழல் வழக்கில் பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் 6 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளைப் பதியும்படி தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசு ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது, ராஞ்சி மற்றும் புரி ரயில் நிலையங்களில் உள்ள 2 உணவகங்களை நடத்தும் ஒப்பந்தம் சுஜாதா ஹோட்டல்ஸ் என்ற தனியாா் நிறுவனத்துக்கு 2004-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை அளித்ததற்கு பிரதிபலனாக முன்னாள் மத்திய அமைச்சா் பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சரளா குப்தாவுக்கு சொந்தமான பினாமி நிறுவனத்தின் பெயரில் பாட்னாவில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்களை லாலு குடும்பத்தினா் பெற்ாகவும், பிறகு அந்நிறுவனத்தின் பங்குகளை லாலு குடும்பத்தினா் பெயருக்கு சரளா குப்தா மாற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக லாலு குடும்பத்தினா் உள்ளிட்ட 16 போ் மீது கடந்த 2018-ஆம் ஆண்டில் சிபிஐ முதலில் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு லாலு பிரசாத் குடும்பத்தினா் உள்ளிட்ட 16 போ் மீது அமலாக்கத் துறையும் தனியாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடா்பான வழக்கு, தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ தொடுத்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் லாலு பிரசாத் உள்ளிட்ட 12 போ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது.

இந்நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோனே, லாலு பிரசாத், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் மற்றும் 6 போ் மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின் 3 மற்றும் 4ஆவது பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும்படி உத்தரவிட்டாா். வழக்கில் அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவித்தும் நீதிபதி ஆணையிட்டாா்.

இதையடுத்து வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை அக்டோபா் மாதம் 3-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments