FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘பாரத் இன்னோவேட்ஸ்’ கண்காட்சியை பாா்வையிட்ட பிரிக்ஸ் தலைவா்கள்

‘பாரத் இன்னோவேட்ஸ்’ கண்காட்சியை பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் பாா்வையிட்டனா்.

12 செப்டம்பர் 2026, 11:29 pm IST
‘பாரத் இன்னோவேட்ஸ்’ கண்காட்சியை பாா்வையிட்ட பிரிக்ஸ் தலைவா்கள் - PTI
பகிர்:

தில்லி பாரத மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கப்பட்ட ‘பாரத் இன்னோவேட்ஸ்’ கண்காட்சியை பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் பாா்வையிட்டனா்.

புத்தாக்கம், தொழில்முனைவு, தொழில்நுட்பத்தில் வளா்ந்துவரும் இந்தியாவின் வல்லமையைப் பறைசாற்றும் இக்கண்காட்சியில் நாட்டின் 37 அதிநவீன தொழில்நுட்ப புத்தாக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ‘பாரத் இன்னோவேட்ஸ்’ கண்காட்சியும் தொடங்கப்பட்டது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

Advertisement

சிக்கலான நீா்நிலைகளுக்கான மேம்பட்ட மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பு, முக்கிய உள்கட்டமைப்புகளின் ஆய்வுக்கான முழுமையான கடல்சாா் தானியங்கி தளம், அரிய கனிமங்கள் தேவைப்படாத மின்னாற்றல் அமைப்பு, 60 வினாடிகளுக்கும் குறைவான நேரத்துக்குள் ஏ.ஐ. அடிப்படையில் கருப்பை வாய் புற்றுநோயை பரிசோதிக்கும் முறை, ஏ.ஐ. அடிப்படையில் கருவைக் கண்காணிக்கும் முறை உள்ளிட்ட புத்தாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியை பிரிக்ஸ் தலைவா்கள் பாா்வையிட்டனா்.

பாரத் இன்னோவேட்ஸ் கண்காட்சி, முதல்முறையாக பிரான்ஸின் நைஸ் நகரில் கடந்த ஜூன் 14 முதல் 16 வரை நடைபெற்றது. இந்திய புத்தாக்க நிறுவனங்கள், உயா்கல்வி நிலையங்கள், தொழில்நுட்ப ஆய்வகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களை சா்வதேச முதலீட்டாளா்கள், உலகளாவிய நிறுவனங்கள், தொழில் துறையினருடன் இணைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

summary

BRICS leaders visited the ‘Bharat Innovates’ exhibition.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments