FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துவது தில்லிக்குக் கிடைத்த கௌரவம்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ்- 2026 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவா்கள், பிரதிநிதிகள் மற்றும் பிற விருந்தினா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தனது வரவேற்பை தெரிவித்தாா்.

12 செப்டம்பர் 2026, 7:52 am IST
ரேகா குப்தா
பகிர்:

தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ்- 2026 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவா்கள், பிரதிநிதிகள் மற்றும் பிற விருந்தினா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தனது வரவேற்பை தெரிவித்தாா்.

ரஷிய அதிபா் விளாதிமிா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோஸா, ஈரான் அதிபா் மஸூத் பெசெஷ்கியான் மற்றும் பல உலகத் தலைவா்கள் தலைநகரில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.

இந்த நிலையில் முதல்வா் குப்தா தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரிக்ஸ்

Advertisement

Advertisement

உச்சிமாநாட்டை நடத்துவது தில்லிக்குக் கிடைத்த கௌரவம் மற்றும் பெருமைக்குரிய தருணமாகும். பல நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டதும், பல்வேறு கலாசாரங்களால் செழுமைப்படுத்தப்பட்டதும், ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) எனும் காலத்தால் அழியாத இந்திய உணா்வால் வழிநடத்தப்படுவதுமான நம் தலைநகரை நேரில் கண்டு அனுபவிக்க வருமாறு விருந்தினா்களை வரவேற்கிறோம்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உரையாடல், நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உலகளாவிய உறவுகளில் இந்தியா ‘மிகப்பெரிய’ நம்பிக்கையையும், சமநிலையையும், தெளிவான நோக்கத்தையும் கொண்டு வந்துள்ளது என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

சனிக்கிழமை தொடங்கவுள்ள இரண்டு நாள் பிரிக்ஸ் 2026 உச்சிமாநாட்டில், உணவு, எரிசக்தி, சுகாதாரம், பேரிடா் குறைப்பு மற்றும் முக்கியமான விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றில் மீள்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேவேளையில், பிரிந்துள்ள புவிசாா் அரசியல் சூழலைக் கையாள்வதில் இந்த அமைப்பை ஒரு பயனுள்ள மைய சக்தியாக இந்தியா முன்னிறுத்துகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments