FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் கடல் வளங்களை ஆராய்வதில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் கடல் வளங்களை ஆராய்வதில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று ஜிதேந்திர சிங் தெரிவித்திருப்பது குறித்து...

12 செப்டம்பர் 2026, 3:53 pm IST
மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் - எக்ஸ்
பகிர்:

புதுதில்லி: இந்திய கடற்பரப்பு சூழலியல், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்பட வேண்டும் என்றும், ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் கடல் வளங்களை ஆராய்வதில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

'கடற்கரைச் சூழலியல், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை' 2026 மாநாட்டில் காணொளி வாயிலாக அவர் பேசியதாவது:

இந்தியாவின் 11,000 முதல் 12,000 கி.மீ பரப்பளவு கொண்ட கடற்கரைப் பகுதி, கடல் வளங்கள் மற்றும் "நீலப் பொருளாதாரம்" ஆகியவற்றிற்குப் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது.

Advertisement

Advertisement

நாட்டின் நீண்ட கடற்கரை மற்றும் கடல்சார் சூழல் குறிப்பிட்டத்தக்க வாய்ப்புகளை வழங்குவதோடு, அறிவியல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையையும் கோருகின்றன.

உலகின் மிகப்பெரிய கடற்பரப்பை(12,000 கிமீ நீளம்) கொண்டுள்ள இந்தியா, நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பெருங்கடல் மற்றும் கடலோர பகுதிகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகின்றன. கடல் உடனான நமது வரலாற்றுத் தொடர்பு, நமது முன்னோர்களுக்கு கடல்சார் சூழல் குறித்திருந்த அறிவையும் புரிதலையும் பிரதிபலிக்கிறது.

நாடு தனது பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், இதுவரை முழுமையாக ஆராயப்படாத வளங்களை நோக்கி கவனம் செலுத்த வேண்டும். உலோகங்கள், கனிமங்கள் மற்றும் மீன்வளம் உள்ளிட்ட கடல் மற்றும் கடற்கரை சார்ந்த வளங்களை குறிப்பிடத்தக்க ஆற்றல் கொண்ட துறைகளாக தெரிவித்த அவர், ஆழ்கடலில் அதிகளவில் இதுவரை அதிகம் ஆராயப்படாத வளங்களை ஆய்வு செய்வதற்கான பணிகளை தொடங்கியிருப்பதாகவும், அதற்காக உள்நாட்டு திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

உள்நாட்டு கடல்சார் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் அதிநவீன கடல்சார் ஆய்வுக் கப்பலான சாகர் மந்தன் கப்பல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஆழ்கடல் ஆராய்ச்சியில் இந்தியா தன்னிறைவு நிலையை எட்டுவதற்கு உதவும்.

எதிர்காலத்தில் கடல்சார் கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், மீன்வளத் துறையின் பொருளாதார ஆற்றலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பணிகளையும் அவர் முன்னிலைப்படுத்தினார்.

கடல்சார் சூழல் மற்றும் கடற்கரை குறித்த நாட்டின் புரிதல் மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துவதில் கடல் கண்காணிப்பு, உளவு பார்த்தல், தகவல் தொடர்பு, தொலை உணர்வு, தரவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

கடலின் ஆழத்தை ஆராய்வதற்காக ரோபோக்கள் மற்றும் ஆழ்கடல் ஆய்வு வாகனங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் கடல் வளங்களை ஆராய்வதில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

மேலும், மாநாடு கடல்சார் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெறுவதற்கு உதவிபுரிவதோடு, புவி அறிவியல், கல்வி, பாதுகாப்பு, கடல்சார் நிறுவனங்கள், தொழில்துறை ஆகியோருக்கு கடல்சார் சவால்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

இந்திய கடற்பரப்பு சூழலியல், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்பட வேண்டும். கடற்கரைச் சூழலியல் மற்றும் கடற்கரை பாதுகாப்பு ஆகியவற்றை தனித்தனியாகக் கையாள முடியாது. மீள்திறன் கொண்ட கடற்கரைப் பகுதிகளுக்கு ஆரோக்கியமான கடல்சார் சூழல் மண்டலங்கள், விழிப்புணர்வுள்ள சமூகங்கள், பயனுள்ள நிர்வாகம் மற்றும் வலுவான அறிவியல் திறன்கள் தேவை.

அறிவியல் அறிவு கடற்கரைத் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கு நேரடியாகப் பங்களிக்கும் வகையில், கடல்சார் அறிவியலை தேசியக் கொள்கையுடன் இணைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கடற்கரைச் சமூகங்களின் பங்களிப்பை வலியுறுத்தியவர், அவர்கள் கடற்கரைச் சூழல் மண்டலத்தின் ஒரு அங்கம் என்றும், கடற்கரை வளங்களின் பொருளாதார ஆற்றலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம், பாரம்பரிய அறிவு மற்றும் பங்கேற்பு ஆகியவை நிலையான கடற்கரை வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. நாட்டின் கடற்கரை உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகங்கள் ஆகியவை இணைப்பு மற்றும் வர்த்தகத்திற்கு மையமாகத் திகழ்கின்றன என்று அவர் கூறினார்.

Deep Ocean Mission and Indigenous Technologies Opening New Frontiers for Exploration of Marine Resources: Dr. Jitendra Singh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments