தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷா
தாய் மொழியுடன் சேர்த்து மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அமித் ஷா தெரிவித்துள்ளது குறித்து...
தாய் மொழியுடன் சேர்த்து மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (செப். 14) தெரிவித்தார்.
மும்பையில் 6 வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு இன்று (செப். 14) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
Advertisement
Advertisement
''ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளை நிர்வாக மொழியாக மாற்றுவதிலும், அறிவியல் மற்றும் இலக்கியத்தின் மொழிகளாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தி, அவற்றை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது.
இந்திய மொழிகளுக்கிடையே பல்வேறு வார்த்தைகள், அறிவு மற்றும் இலக்கிய ரீதியாக ஒருங்கிணைப்பை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மொழிகளுக்கு இடையே சிக்கல்களை உருவாக்க முயல்பவர்கள், ஒரு குழந்தையால் தனது தாய்மொழியின் மூலமாகவே நாட்டை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதைப் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பல மொழிகள் இருந்தாலும் ஒரே குரலில் ஒலிக்கிறது இந்தியா. பல மொழிகள் இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்திய உணர்வு நிலைத்திருக்க வேண்டும். பல வட்டார வழக்குகள் இருக்கலாம்; இருப்பினும், இந்தியாவின் குரல் ஒன்றாகவே இருக்க வேண்டும்'' என அமித் ஷா குறிப்பிட்டார்.
oppose learning an additional Indian language alongside one's mother tongue "do not know what sin they are committing Amit Shah
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.