FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உள்நாட்டு சுற்றுலாவில் தனித்துவமாக விளங்கும் இந்தியா! மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

சுற்றுலா சிறப்பு கருத்தரங்கிற்கு விடியோ மூலம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாழ்த்து தெரிவித்தது பற்றி...

15 செப்டம்பர் 2026, 12:32 pm IST
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் - TNIE
பகிர்:

உள்நாட்டு சுற்றுலாவில் தனித்துவமான நாடாக இந்தியா விளங்குவதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த கருத்தரங்கை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கிவைக்கவிருந்த நிலையில், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சுற்றுலா சிறப்பு கருத்தரங்கிற்கு விடியோ மூலம் வாழ்த்துச் செய்தியை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பகிர்ந்துகொண்டார்.

அந்த விடியோவில் அவர் பேசியதாவது:

“தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் என்னால் கருத்தரங்கில் நேரில் பங்கேற்க முடியவில்லை.

உள்நாட்டு சுற்றுலாவில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு அனுபவங்களை வழங்கும் ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது. ஒவ்வொரு பகுதியிலிருக்கும் நிலம், கலாசாரம், உணவு வகை உள்ளிட்டவை நமது நாட்டின் தனித்துவத்தை காட்டுகிறது.

சுற்றுலா என்பது வெறும் இடங்களை சுற்றிப் பார்ப்பது மட்டுமல்ல. நமது பாரம்பரியத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதாகும். சுற்றுலா மூலம் உள்ளூர் மக்கள், சுற்றுலா வழிகாட்டுகள், சிறுதொழிலாளர்கள், வியாபாரிகள் பலனடைகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

summary

India stands out in domestic tourism! Union Minister Gajendra Singh Shekhawat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments