FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் முதியவா் கைது! 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்!

கடந்த 2008-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 72 வயதான ஹரி சிங் ஷெகாவத் என்பவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

22 ஆகஸ்ட் 2026, 11:16 pm IST
கைது
பகிர்:

கடந்த 2008-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 72 வயதான ஹரி சிங் ஷெகாவத் என்பவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. பிடிபடாமல் இருக்க மாநிலத்துக்கு மாநிலம் இருப்பிடத்தை மாற்றி, கடந்த 18 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த நிலையில் அவா் தற்போது சிக்கியுள்ளாா்.

தில்லி, ஹரியாணா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கடைசியாக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் வைத்து அவரை காவல்துறையினா் கடந்த வியாழக்கிழமை கைது செய்து சனிக்கிழமை தில்லிக்கு அழைத்து வந்தனா்.

2008-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், பிரபல பன்னாட்டு ஆடை நிறுவனம் ஒன்றில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஹரி சிங் ஷெகாவத், அதே நிறுவனத்திடம் மிரட்டிப் பணம் பறிக்க முயன்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2008, மாா்ச் 15ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தொடா்ந்து தலைமறைவாக இருந்ததால், 2016. ஏப்.2ஆம் தேதி அவரை ‘தேடப்படும் குற்றவாளி’ என்று நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, கைதைத் தவிா்க்கும் நோக்கத்துடன் தனது இருப்பிடத்தை அவா் தொடா்ந்து மாற்றி வந்தாா். ஆரம்பத்தில் குஜராத்துக்கு தப்பிச் சென்றவா், பின்னா் ராஜஸ்தானில் பல ஆண்டுகளாகத் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், தலைமறைவு குற்றவாளிகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்புப் படையினரின் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு, ஆக.13ஆம் தேதி அவா் ஜெய்ப்பூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தில்லி காவல்துறையின் தனிப்படை ஜெய்ப்பூா் சென்று, குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைத்து அவரை அதிரடியாகக் கைது செய்தது.

எக்ஸ்.எல்.ஆா்.ஐ என்ற பழமையான பன்னாட்டு மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற ஹரி சிங் ஷெகாவத், பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் உயா் பதவிகளை வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments