FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரிபுராவில் ரூ. 40 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; லாரி ஓட்டுநர் கைது

திரிபுராவில் ரூ. 40 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக...

16 செப்டம்பர் 2026, 1:21 pm IST
போதைப்பொருள் - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: அகர்தலாவுக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.40 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப்பொருளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

அசாமிலிருந்து போதைப்பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரதசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, வட திரிபுரா காவல்துறை, அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இணைந்து திரிபுராவின் பனிசாகர் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

அப்போது, அசாமில் இருந்து அகர்தலா நோக்கி வந்த குறிப்பிடப்பட்ட அந்த லாரியை பனிசாகர் சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், லாரியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, லாரியையும், போதைப் பொருளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக பனிசாகர் துணைப் பிரிவு காவல் அதிகாரி கிஷாலய் சிசோடியா கூறியதாவது:

அசாமில் இருந்து அகர்தலாவுக்கு இந்த போதைப் பொருளை கட்டத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ போதைப்பொருளின் இந்திய மதிப்பு ரூ.40 கோடி எனவும், இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.125 கோடி.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தடயவியல் அறிவியல் ஆய்வக குழுவினர் பரிசோதித்ததாகவும், அது 'யாபா' போதைப்பொருள் என்பதை உறுதிப்படுத்தியதாக சிசோடியா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கு உதவிய பனிசாகர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் வட திரிபுரா காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் ராய் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

போதைப்பொருள் இல்லாத திரிபுராவை உருவாக்கும் மாநில அரசின் இலக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிசோடியா குறிப்பிட்டார்.

summary

North Tripura Police, Assam Rifles and the Directorate of Revenue Intelligence (DRI) in a joint operation seized around 5 lakh yaba tablets...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments