புனித நகரமான மெக்கா மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: இந்தியா கண்டனம்!
மெக்கா நகரின் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
மெக்கா நகரின் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஏமனைச் சேர்ந்த ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். செளதி அரேபியா, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
செளதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரின்மீது ஹெளதி படைகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செளதி அரேபிய பாதுகாப்புப் படையினர் செய்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மெக்கா நகரின் தெற்குப் பகுதியில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் ஹெளதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல சௌதி அரசு அறிவுறுத்தியது.
ஹெளதிகள் ஏவிய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் வான்வழித் தாக்குதல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் செளதி ராணுவம் நடு வானிலேயே சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீதான தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மெக்கா அருகே நடைபெற்ற டிரோன் தாக்குதல் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சௌதி அரேபிய அரசின் இறையாண்மைக்குட்பட்ட பிரதேசத்தின் மீதான தாக்குதல்கள், பொதுமக்களின் உயிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகள் போன்றவறிற்கு இந்தியா மீண்டும் கண்டனம் தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ள மெக்கா மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கவலை அளிக்கிறது.
இப்பகுதியில் விரைவில் அமைதியும் நிலைத்தன்மையும் திரும்புமென நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
India has condemned the attack carried out by Houthi rebels on the city of Makkah.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.