பூடான் பிரதமருடன் ஞானேஷ் குமார் சந்திப்பு!
பூடான் பிரதமருடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சந்திப்பு...
பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டுக்குச் சென்றுள்ளார். கடந்த செப். 15 ஆம் தேதி நடைபெற்ற தேசிய வாக்காளர் நாள் விழாவில் ஞானேஷ் குமார் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தில், கடந்த செப்.14 ஆம் தேதி திம்புவில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியல் வாங்சுக்கை ஞானேஷ் குமார் நேரில் சந்தித்து உரையாடினார். மேலும், பூடானின் இளம் வாக்காளர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஞானேஷ் குமார் தேர்தல் சார்ந்த புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவைச் சந்தித்த ஞானேஷ் குமார் அவருடன் இருநாடுகள் இடையேயான ஜனநாயக விவகாரங்கள் குறித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனநாயக நடைமுறைகள் மற்றும் தேர்தல் நிர்வாகச் செயல்பாடுகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகப் பிற நாடுகளுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
CEC of India Gyanesh Kumar met Bhutanese Prime Minister Tshering Tobgay in person and held discussions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.