FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இண்டிகோ விமானத்தின் சிறப்பு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு!

இண்டிகோவின் விமான சிறப்பு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது பற்றி...

18 செப்டம்பர் 2026, 11:16 am IST
இண்டிகோ விமானம் - கோப்புப் படம்
பகிர்:

இண்டிகோ நிறுவனம் பல்வேறு கூடுதல் மற்றும் சிறப்புச் சேவைகளுக்கான கட்டணத்தை வியாழக்கிழமை முதல் உயர்த்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, நாளொன்றுக்கு 2,500-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு விமான சேவைகளில் 60 சதவிகிதத்துக்கு மேல் இண்டிகோ நிறுவனம் பங்களித்து வருகிறது.

இந்த நிலையில், கூடுதல் பேக் கட்டணம், கைக்குழந்தைகளுக்கான பயணக் கட்டணம், தனியாகப் பயணிக்கும் குழந்தைகளுக்கான கட்டணம் உள்ளிட்டவற்றை இண்டிகோ நிறுவனம் வியாழக்கிழமை முதல் உயர்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக எடைக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 700 ஆக இருந்த கட்டணம் ரூ. 800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிறந்து மூன்று நாள்கள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகள் பயணிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ. 2,000-லிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த டிக்கெட்டில் பயணிக்கும் குழந்தைகளுக்கு தனி இருக்கை கிடையாது.

உள்நாட்டு விமானங்களில் பெற்றோர் இல்லாமல் தனியாக பயணிக்கும் 5 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமான ரூ. 5,000-ஐ தற்போது ரூ. 5,999 ஆக இண்டிகோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதே சேவைக்கு வெளிநாட்டு விமானங்களில் ரூ. 12,999 ஆக வசூலிக்கப்படுகிறது.

summary

IndiGo hikes charges for special services!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments