மே. வங்க இடைத்தேர்தல்: தொடரும் வேட்பாளர்கள் கைது நடவடிக்கை!
மேற்கு வங்க இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து...
மேற்கு வங்க இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
மேற்கு வங்கத்தில், மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூஸ் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் சின்னம் மற்றும் பெயரைத் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மமதா பானர்ஜி பிரிவுக்கு ‘மமதா அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் ஒதுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
மமதா அணியின் சார்பில் நந்திகிராமில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே மற்றும் ரெஜிநகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் ரபியுல் ஆலம் சௌதரி ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நந்திகிராம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மமதா பானர்ஜி தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.
மமதா ஆதரவளித்த சில மணிநேரங்களில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டார்.
மேலும், ரெஜிநகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான சைஃபுல் இஸ்லாம், 2021 மாநிலத் தேர்தலின்போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஐந்தாண்டுப் பழைய வழக்கில் நேற்று (செப். 19) கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னதாக பதியப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Candidates contesting the West Bengal by-elections are being repeatedly arrested.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.