FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

டி-72, டி-90 பீரங்கிகளுக்கான மின் அலகுகள் கொள்முதல்: ரூ. 586 கோடியில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

டி-72 மற்றும் டி-90 பீரங்கிகளுக்கான துணை மின் அலகுகளை ரூ.586 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டது.

22 செப்டம்பர் 2026, 12:04 am IST
- ENS
பகிர்:

டி-72 மற்றும் டி-90 பீரங்கிகளுக்கான துணை மின் அலகுகளை ரூ.586 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டது.

தில்லியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் முன்னிலையில் அக்யூரேட் இன்டஸ்ட்ரியல் கன்ட்ரோல் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பீரங்கியில் உள்ள தீ கட்டுப்பாட்டு அமைப்பு, பீரங்கி நிலைத்தன்மை அமைப்பு மற்றும் பிற துணை அமைப்புகளுக்குத் தேவையான மின்சாரத்தை துணை மின் அலகுகள் (ஏபியு) உருவாக்குகின்றன.

Advertisement

Advertisement

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏபியுக்களைச் சோ்ப்பது இந்திய ராணுவத்தின் இயந்திரமாக்கப்பட்ட படைப்பிரிவுகளின் செயல்பாட்டுத் தயாா்நிலை, நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.

இதன் அடிப்படையில் அக்யூரேட் இன்டஸ்ட்ரியல் கன்ட்ரோல் நிறுவனத்துடன் ரூ.586 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இது ‘வளா்ச்சியடைந்த பாரதம்-2047’ என்ற உயரிய இலக்கை அடைவதில் மற்றுமொரு மைல்கல்லாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments