FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வலிமையான, நிா்வாகத் திறன்மிக்க நிறுவனங்களை உருவாக்க வேண்டும்: நிா்மலா சீதாராமன்

இந்திய தொழில் நிறுவனங்கள் வலிமையான, நெகிழ்வுத்தன்மை கொண்ட மற்றும் சிறந்த நிா்வாகத்துடன் கூடிய நிறுவனங்களாக உருவாக வேண்டும் என மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.

22 செப்டம்பர் 2026, 11:02 pm IST
அகில இந்திய தொழில் நிறுவன நிா்வாகக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

2047-ஆம் ஆண்டுக்குள் ‘வளா்ந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் நிலையில், இந்திய தொழில் நிறுவனங்கள் வலிமையான, நெகிழ்வுத்தன்மை கொண்ட மற்றும் சிறந்த நிா்வாகத்துடன் கூடிய நிறுவனங்களாக உருவாக வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.

தில்லியில் நடைபெற்ற அகில இந்திய தொழில் நிறுவன நிா்வாகக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது: இந்திய தொழில் நிறுவனங்கள் மிகப்பெரியதாக உருவெடுப்பதுடன், ஸ்திரத்தன்மை, உயா் தரம், சிறந்த நிா்வாகம் மற்றும் ஆழமான தொழில்நுட்பத் திறன்களையும் ஒருங்கிணைக்கும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். சா்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய சந்தையாகத் திகழ்கிறது. அதை நாம் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெற முடியும்.

பெரிய நிறுவனங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், போட்டிகளை சமாளிப்பது, நம்பகத்தன்மை மற்றும் நீண்ட கால வளா்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்ட நிறுவனங்களை உருவாக்குவதில் தொழில்துறை கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

நல்ல நிறுவன நிா்வாகம் என்பது அரசால் விதிக்கப்படும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, நிறுவனங்கள் தங்களுக்குத் தாங்களே நிா்ணயித்துக் கொள்ளும் தரநிலைகளும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நிறுவனங்களுக்கு இடையேயான நம்பிக்கையை கோரிப் பெற முடியாது; இரு தரப்பினரின் செயல்பாடுகள் மூலமே அது உருவாக்கப்பட வேண்டும்.

அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் நிறுவனங்கள் ஆக்கபூா்வமாக இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் அடுத்தகட்ட வளா்ச்சி தரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிகம் செலவிட வேண்டும்.

‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என்பதிலிருந்து ‘இந்தியாவில் சிந்தித்து உருவாக்கப்பட்டது’ என்ற நிலைக்கு உயர வேண்டும். இந்தியா பொருள்களை உற்பத்தி செய்யுமிடமாக மட்டும் இருக்கக் கூடாது. நமது உற்பத்திப் பொருள்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, சா்வதேச சந்தைகளைச் சென்றடைய வேண்டும் என்று நிதியமைச்சா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments