FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேர்தல் ஆணையம் செய்வது தேசத் துரோகம்! பிரியங்கா காந்தி!

தேர்தல் முறைகேடுகளைத் தலைமைத் தேர்தல் ஆணையர் அனுமதித்தால் அது தேசத் துரோகம்..

23 செப்டம்பர் 2026, 3:53 pm IST
பிரியங்கா காந்தி - X
பகிர்:

தேர்தல் முறைகேடுகள் நடப்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்குத் தெரிந்திருந்தும் அதை அனுமதித்திருந்தால் அது நாட்டுக்கு இழைக்கப்படும் தேச துரோகம் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறினார்.

இதுதொடர்பாக நிலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா கூறுகையில்,

தேர்தல் முறைகேடுகள் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

Advertisement

Advertisement

தனது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நிலவும் பராபட்சம் மற்றும் அநீதி குறித்து பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பி வருகிறார்.

தேர்தல் முறைகேடு குறித்து அவர் பல பிரச்னைகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையர்களே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் பிரச்னைகளை தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றது.

எனவே, இது நமது ஜனநாயகத்திற்கு மிகவும் தீவிரமான ஒரு பிரச்னையாக நான் கருதுகிறேன். தேர்தல்களே இல்லையென்றால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? தேர்தல்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டாலோ அல்லது ஏதேனும் வகையில் முறைகேடுகள் செய்யப்பட்டாலோ அதற்குத் தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்து, அதை அனுமதித்தால் அது ஜனநாயகத்தின் மீதான மிகக் கடுமையான தாக்குதலாகும்.

இது உண்மையில் நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இது தேசத்துரோகச் செயல். இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நேர்மையான விசாரணையை நடத்தாத நபர்களால் இந்த விவகாரம் விசாரிக்கப்படக் கூடாது. ஒட்டுமொத்த தேசமும் அறியும் வகையில் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும்.

நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறோம். பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக நாம் வலுவான ஜனநாயகத்தைக் கொண்டிருக்கிறோம்.

இந்த விவகாரங்களை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் அயராது உழைத்து வருகிறோம். ஆனால், இங்கே தேர்தல் ஆணையமோ அதை வலுவிழக்கச் செய்யத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியல்களில் முறைகேடு, லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் நடந்த முறைகேடுகள் என காங்கிரஸ் நீண்ட காலமாகச் சந்தேகப்பட்டு வந்த விஷயங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது மிகவும் தீவிரமான ஒரு விஷயம்.

இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments