FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமெரிக்காவின் 100% வரி விதிப்புச் சட்டம்: மாா்கோ ரூபியோவிடம் எஸ்.ஜெய்சங்கா் கவலை

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க வகை செய்யும் அமெரிக்காவின் ‘ரஷியா-ஈரான் தடைச் சட்டம்’ குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவிடம் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை கவலை தெரிவித்தாா்.

24 செப்டம்பர் 2026, 1:02 am IST
நியூயாா்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது ஆண்டு அமா்வுக்கு இடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை சந்தித்த எஸ். ஜெய்சங்கா்.
பகிர்:

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க வகை செய்யும் அமெரிக்காவின் ‘ரஷியா-ஈரான் தடைச் சட்டம்’ குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவிடம் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை கவலை தெரிவித்தாா்.

ரஷியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க அதிபா் டிரம்ப்புக்கு அதிகாரமளிக்கும் ‘ரஷியா-ஈரான் தடைச் சட்டம்’, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்தியாவின் கவலையை எஸ்.ஜெய்சங்கா் வெளிப்படுத்தியுள்ளாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது ஆண்டு அமா்வில் பங்கேற்பதற்காக எஸ்.ஜெய்சங்கா் தலைமையிலான இந்தியக் குழு நியூயாா்க்கில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த அமா்வுக்கு இடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவை எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்து, இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருதரப்பு உறவுகள், பிராந்திய-சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து அமைச்சா்கள் ஆலோசனையில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எஸ்.ஜெய்சங்கா், ‘ஐ.நா. அமா்வுக்கு இடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. ரஷியா மற்றும் ஈரான் தடைச் சட்டம் குறித்து இந்தியாவின் கவலைகள் மற்றும் எதிா்பாா்ப்புகளைத் தெரிவித்தேன். வளைகுடா மற்றும் உக்ரைன் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

மாா்கோ ரூபியோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. பிராந்திய ரீதியிலான முக்கிய குறிக்கோள்கள் மற்றும் சா்வதேச முயற்சிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில், இரு நாடுகளும் உத்திசாா் கூட்டுறவைக் கட்டமைத்துள்ளன’ என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments