FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம்! மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் கைது!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஏஐஎஸ்எஃப் தலைவர் கைது...

25 செப்டம்பர் 2026, 7:27 pm IST
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் கைது... - எக்ஸ்
பகிர்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்துக்கு எதிராகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டவிரோதமாகத் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று (செப். 25) நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை அங்கிருந்து கலைக்க முயன்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்து, அவர்களை போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி வரும் அக்.2 ஆம் தேதி முதல் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Neha Bora, President of the AISA, has been arrested during a protest in Delhi demanding the resignation of CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments