FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2022 முதல் 2026 வரை கட்சித்தாவிய 111 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்!

2022 முதல் 2026 வரை 111 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தாவியுள்ளதைப் பற்றி...

25 செப்டம்பர் 2026, 9:46 pm IST
கட்சித்தாவல்!
பகிர்:

2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு, 111 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாறியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 26 மக்களவை உறுப்பினர்களும், ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களும், 78 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சித் தாவியுள்ளனர்.

இதில் தனிநபராகக் கட்சித் தாவல்கள், கட்சியை இணைத்தல், இடைத்தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து ஏற்படும் ராஜிநாமாக்கள் உள்ளிட்டவைகளும் அடங்கியுள்ளன.

Advertisement

Advertisement

நாகாலாந்தில் அதிகபட்சமாக நாகா மக்கள் முன்னணியிலிருந்து 32 எம்.எல்.ஏக்கள் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்குத் தாவியுள்ளனர். அதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த மக்களவை எம்.பி.க்கள் 20 பேர் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சிக்கு மாறியுள்ளனர்.

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியிலிருந்து 9 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுக்குத் தாவினர். கோவா பாஜகவில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், அதேசமயம் பஞ்சாபில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேர் பாஜகவிலும் இணைந்தனர்.

அதிகளவில் கட்சி மாறிய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்?

  • நாகா மக்கள் முன்னணி - 32 எம்.எல்.ஏக்கள்

  • பாஜக - 29

  • இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி - 20

  • காங்கிரஸ் - 9

  • சிவசேனா (உத்தவ் தாக்கரே) - 8

  • தேசிய மக்கள் கட்சி - 6

  • அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி - 4

summary

As many as 111 MPs and MLAs changed political parties after winning elections to Parliament and state assemblies between 2022 and 2026, with Nagaland and West Bengal recording the highest number of cases, according to an analysis by the Association for Democratic Reforms (ADR) and National Election Watch.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments