விஜய்க்கு எதிராக நடிகர் அஜித் கட்சி தொடங்குகிறாரா? தமிழக மக்கள் கழகம் அறிமுகம்
நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் புதிதாகக் கட்சி தொடங்கியது குறித்து...
நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் ரசிகர்கள் ஒன்றிணைந்து தமிழக மக்கள் கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
நடிகரும் ரேஸருமான அஜித்குமார், திரைப்படங்களில் நடித்துக் கொண்டும், இடையில் கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். இவருக்கு ரசிகர் மன்றங்கள் எதுவும் வைக்க வேண்டாம் என தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தியபோதிலும், அஜித்குமாருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
முதல்வர் விஜய் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவரது ரசிகர்களும், அஜித்குமாரின் ரசிகர்களும் எப்போதும் மோதலிலேயே இருப்பர். இப்போதும்கூட இருவரின் ரசிகர்களும் சில இடங்களில் பேனர் வைத்து போட்டி போடுவதும் உண்டு. இருப்பினும், விஜய்யும் அஜித்குமாரும் முன்பிருந்தே நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
சமீபத்தில் அஜித்குமாரின் அணி பங்கேற்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடக்கி வைத்து, இருவரும் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, விஜய் தற்போது முதல்வரான நிலையில், அஜித்குமாரின் ரசிகர்களும் சேர்ந்து புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் அஜித்குமாரின் ரசிகர்களும் தீவிர ஆதரவாளர்களும் ஒன்றுசேர்ந்து, தமிழக மக்கள் கழகம் என்ற அரசியல் கட்சியை முறைப்படி தொடங்கியுள்ளனர். மேலும், தங்கள் கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மூன்று வர்ணங்களாலான அக்கொடியில் மஞ்சள், வெள்ளை, சிகப்பு நிறங்களும், நடுவில் இரு சிறுத்தைகளின் உருவமும் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு, அடுத்தகட்ட களப்பணிகள், கொள்கை பிரகடனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, கட்சியின் பொதுச் செயலாளராக அஜித்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Fans of actor Ajith Kumar launch a new political party
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.