தில்லி எஸ்ஐஆர்: முக்கிய பிரபலம் என குறிக்கும் வசதியை சேர்த்த தேர்தல் ஆணையம்! சாமானியனுக்கு?
தில்லி எஸ்ஐஆர் படிவத்தில் முக்கிய பிரபலம் என குறிக்கும் வசதியை சேர்த்த தேர்தல் ஆணையம் பற்றி..
முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்க, பிஎல்ஓ செயலியில் முக்கிய பிரபலம் என குறிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் சேர்த்துவிட்டது.
இனி, முக்கிய பிரபலம் என்று குறிப்பிடப்படும் பெயர்களுக்கு முரண்பாடுகள் இருந்தாலும் கருதப்படாமல், நோட்டீஸ் பிறப்பிக்கப்படாமல் அனுமதி வழங்கப்படும் என்றும், சாமானியங்களின் பெயர்களுக்கு முரண்பாடுகள் இருக்கக் கூடாது, இருந்தால் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும், விளக்கம் கொடுத்த பிறகும் பெயர் சேர்க்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையே நீடிக்கிறது.
ஏற்கனவே, தேர்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், முக்கிய பிரபலம் என குறிக்கும் வாய்ப்பு சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள எடுக்கப்பட்டிருக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, நாட்டின் சொற்ப வருவாயை செலவிடும் ஒவ்வொரு காசுக்கும் வரி செலுத்தும் சாமானியனுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்திருக்கிறது என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
மக்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தீவிர திருத்த படிவத்திலும் முக்கிய பிரபலம் என குறிப்பிடும் வாய்ப்பு இணைக்கப்பட்டுள்ளது. நாடு மழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிஎல்ஓ செயலியில் விஐபி எனக் குறிக்கும் (Mark VIP) வசதியைத் தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது; தில்லி எஸ்ஐஆர் சரிபார்ப்பின்போது அடையாளம் காணப்பட்ட முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் மீதான சந்தேகங்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
தில்லியில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக, விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி 33.13 லட்சம் வாக்காளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவர்களில் முன்னாள் துணைப் பிரதமா் எல்.கே.அத்வானி, முன்னாள் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் பெயா்களும் இடம்பெற்றுள்ளன.
வாக்காளா்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களில் அளித்த விவரங்களில் ஏற்பட்டுள்ள ‘தா்க்க ரீதியான முரண்பாடுகள்’ மற்றும் 2002-ஆம் ஆண்டு எஸ்ஐஆா் பட்டியலுடன் விவரங்களை இணைக்க முடியாதது ஆகியவை நோட்டீஸ் அனுப்புவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
தில்லி முதல்வா் ரேகா குப்தா, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், முன்னாள் மத்திய அமைச்சா் கபில் சிபல் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகா்களுக்கும் இதே நடைமுறையின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு முக்கிய பிரமுகர்களின் பெயர்களுக்கு நோட்டீஸ் வரும்போது தலைப்புச் செய்தியாக மாறுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
Delhi SIR: Election Commission adds a feature to mark 'key personalities'—but what about the common man?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.