FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜலந்தரில் அமித் ஷா பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வெடிகுண்டு மிரட்டல்!

அமித் ஷா பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு மிரட்டல் பற்றி...

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்
பகிர்:

பஞ்சாப், ஜலந்தரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில்,வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள் என வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகிவரும் நிலையில், இன்று அமித் ஷா வருகை தரவுள்ள ஜலந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு மின்னஞ்சல் விடுக்கப்பட்டுள்ளன.

மின்னஞ்சலைத் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் ஜலந்தர் வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேவி தலாப் கோயில் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாஜகவின் நஷா முக்த் பஞ்சாப் யாத்திரை (போதைப்பொருள் இல்லாத பஞ்சாப் பயணம்) நிறைவடையும் நிலையில், ஜலந்தரின் பராக்பூர் கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றவுள்ளார்.

செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த யாத்திரை, பஞ்சாபின் அனைத்து 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் வழியாகவும் 4,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து, செவ்வாய்க்கிழமையன்று ஜலந்தரை வந்தடைந்தது.

பள்ளிகள், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், தேவி தலாப் கோயில் மற்றும் நீதிமன்ற வளாகம் ஆகியவற்றைக் குறிவைப்பதாக அந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் பல்வேறு இடங்களில் சமீப மாதங்களில் இதுபோன்ற மிரட்டல்கள் பதிவாகி, அவை பின்னர் வெறும் வதந்திகள் (போலி மிரட்டல்கள்) எனத் தெரியவந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு மிரட்டல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments