FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரூ. 3,000 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 5 பாகிஸ்தானியர்களை கைது செய்தது இந்திய கடற்படை!

அரபிக் கடலில் ரூ. 3,000 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி...

ரூ. 3,000 கோடி போதைப் பொருள் பறிமுதல் - X | ICG
பகிர்:

அரபிக்கடலில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து கடந்த செப். 25ஆம் தேதி அரபிக் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது லட்சத்தீவுக்கு மேற்கே அரபிக் கடலில் சென்ற ஈரானைச் சேர்ந்த படகை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

அந்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 526 கிலோ ஹெராயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 3,000 கோடியாகும்.

மேலும், படகிலிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 5 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் மற்றும் படகை பறிமுதல் செய்த இந்திய கடலோரக் காவல்படையினர், பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரையும் மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, இந்திய கடலோரக் காவல்படை இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட கடல் எல்லைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட கடல்சார் மண்டலங்களுக்குள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் உறுதியை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

summary

Rs. 3,000 crore drug seized! Indian Coastal Guard arrested 5 Pakistanis!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments