சிரி... சிரி...
ஆபிஸூக்கு ஏன் லேட்டு?
'ஆபிஸூக்கு ஏன் லேட்டு?'
'பையனோட ஸ்கூலுக்குப் போயிட்டு வந்ததுல கொஞ்சம் லேட்டாயிடுச்சு, சார்!'
'எதுக்கு ஸ்கூல் போனீங்க?'
Advertisement
Advertisement
'பையன் தினமும் ஸ்கூலுக்கு லேட்டா போறான்னு என்னை வரச்சொல்லிருந்தாங்க, சார்!'
'கட்சி அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தை தலைவர் ஏன் கேன்சல் பண்ணிட்டார் ?'
'உண்ணாவிரதத்துல கலந்துக்க வந்த எல்லாருமே பார்சலுக்கு கையில கேரியர் எடுத்திட்டு வந்திருந்தாங்களாம்!'
'உங்க படத்துல கதையே இல்லைனு பேசிக்கிறாங்களே, சார்?'
'கதை இருந்தாத்தான் அது என்னுது...
உன்னுதுன்னு சொல்லி பிரச்னை பண்ணிட றாங்களே, சார்!'
-வி.ரேவதி, தஞ்சை.
'இப்ப நான் சொல்ற கதையைக் கேட்டா
அழுதுடுவீங்க, சார்!'
'உன் கதையை படம் எடுத்துட்டு நான் அழாம இருந்தா, சரி!'
'உங்களுக்கு சுகர் அதிகமாயிருக்கு... லட்டு சாப்பிடாதீங்க!'
'லட்டை உடைச்சி பூந்தியா சாப்பிடலாமா, டாக்டர்?'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'பாதி பந்தியில் ஏன் பீடா வைக்கிறாங்க?'
'சாப்பாடு தீர்ந்து போச்சு!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.