FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

உறுதியளித்தபடி, பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்.

Updated On : 30 ஆகஸ்ட் 2024, 7:17 pm IST
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - DIN
பகிர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை தேசிய கல்விக் கொள்கை - 2020 முழுமையாக ஆதரிக்கிறது. பன்மொழி மற்றும் தாய்மொழியில் கற்பதை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் பழமையான மொழியாகவும் தமிழ் உள்ளது என்பது பெருமைக்குரியது. தமிழ் மொழியைக் கற்க ஒரு பிரத்யேக சேனல் கடந்த ஜூலை 29 2024-ல் தொடங்கப்பட்டது.

2023-24 நிதியாண்டில் சமக்ரசிக்ஷா திட்டத்தில் தமிழத்திற்கு 4 தவணைகளாக ரூ. 1,876.15 கோடி ஒதுக்கப்பட்டது. 2024-25 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ. 4305.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உறுதியளித்தபடி, பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும். 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போல தமிழகமும் கையெழுத்திட வேண்டும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments