ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது இரு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
இரண்டு விசைப்படகுகளுடன் 16 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும், கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை(அக். 23) ஒப்படைக்கப்பட உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.