FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசியலுக்கு வருவீர்களா? - சிவகார்த்திகேயன் பதில்!

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

Updated On : 29 அக்டோபர் 2024, 3:16 pm IST
பகிர்:

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

கோவை மாவட்டம் புதூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அமரன் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படம் குறித்து சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் அமரன் திரைப்படத்தின் டீசர் , டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பபட்டது.

தொடர்ந்து படம் குறித்து சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ராணுவ உடையை கடைசியாக போட்டுவிட்டு அதன் நினைவாக உடையை வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டேன் எனவும் உடையை விட முகுந்த் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்தார்.

அந்த உடையை அணிந்த பிறகு சின்ன சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். படப்பிடிப்பு சீரியசாக இருக்கும் எனவும், ஆனால் நான் கொஞ்சம் ஜாலியா தான் இருப்பேன் என்றார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னால் முதலில் மன ரீதியாக என்னை தயார்படுத்தி கொண்டேன், பின்னர் உடலை தயார் செய்தேன் என்றார்.

விஜய் டிவியில் இருக்கும்போதே சாய் பல்லவியை தெரியும். சாய் பல்லவி என்னை அண்ணா என்று அழைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, ஆனால் இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்கவில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் அதிகம் உள்ளது அதைப்பற்றி பின்னர் பார்ப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments