FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

வால்பாறையில் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் உள்பட 4 பேர் கைது

வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்காலிக பேராசிரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 1 செப்டம்பர் 2024, 6:38 pm IST
வால்பாறையில் அரசு கலைக் கல்லூரி
பகிர்:

கோவை: வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்காலிக பேராசிரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் அரசு மகளிர் தங்கும் விடுதியில் வெளியூர் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி விழுப்புணர்வு நிகழ்ச்சிக்காக தேசிய மகளிர் ஆணையம் ஒருங்கிணைந்த சேவை மையம் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் வந்தவர்களிடம் மாணவிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

மாணவிகள் 7 பேர் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் சிலர் எங்களை தொட்டு பேசுதல் ஆபாசமாக பேசுதல் அலைபேசிக்கு தவறான தகவல்களை அனுப்புதல் போன்ற செயலில் ஈடுபடுவதால் தங்களால் படிக்க இயலவில்லை. நாங்கள் ஊருக்கே செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகளிர் காவல் நிலையத்தில் புகார்

இதையடுத்து வால்பாறை காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வால்பாறையில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் வால்பாறை கலைக்கல்லூரி மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தற்காலிக பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் ஒருவர், என்சிசி பயிற்சியாளர் ஒருவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

இதையடுத்து தற்காலிக பேராசிரியர்கள் இரண்டு பேர் உள்பட 4 பேர் மீதும் பாலியல் தொல்லை குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments