தற்போதைய செய்திகள்

மீண்டும் இணையும் கட்டா குஸ்தி கூட்டணி

DIN

கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இயக்குநர் செல்லா அய்யாவு இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “கட்டா குஸ்தி”. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த இந்தத் திரைப்படம் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் கட்டா குஸ்தியின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் செல்லா அய்யாவு உடன் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மிகப்பெரும் பொருள்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக உருவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி பரபரப்பாக  நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடன்குடி அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தடை கோரி திமுக வழக்குரைஞா் அணியினா் மனு

வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

‘தூத்துக்குடியில் குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்’

குமரியில் இன்று 45 மணி நேர தியானம் தொடங்குகிறாா் பிரதமா் மோடி

SCROLL FOR NEXT