அதிர்ச்சி... ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி! தங்கம் விலை?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும், வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.20,000 உயா்ந்து ரூ.2.74 லட்சத்துக்கு விற்பனையாவது தொடர்பாக...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும், தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.20,000 உயா்ந்து ரூ.2.74 லட்சத்துக்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த டிச. 22-ஆம் தேதி பவுன் ரூ.1 லட்சத்து 560-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து, தங்கம் விலை சற்றும் குறையாமல் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2,560-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.12,890-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1 லட்சத்து 3,120-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.110 உயா்ந்து ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 உயா்ந்த வெள்ளி!
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கடந்த 5 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.28,000 உயா்ந்து ரூ.2.54 லட்சத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.2,74 லட்சத்துக்கு விற்பனையாகி வருகிறது.
தங்கத்துக்கான ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயா்வதால் ஏழை, எளிய விவசாய மக்கள் தங்கம் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனா். எனவே, இந்தியாவில் தங்கத்தின் விலை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதுவரை தங்கத்துக்கான ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்ய வேண்டும். தங்கத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும். மேலும், இது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்
Silver and gold prices reach unprecedented new highs...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.