FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!

வெனிசுலா நாட்டிலிருந்து 6 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டதைப் பற்றி...

Updated On : 1 பிப்ரவரி 2025, 1:22 pm IST
விடுதலை செய்யப்பட்ட 6 அமெரிக்கர்களுடன் தூதர் ரிச்சார்டு க்ரெனெல்
பகிர்:

அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் வெனிசுலா அதிபர் மதுரோவை சந்தித்து பேசிய பின்னர் அந்நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 6 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெனிசுலாவிலுள்ள அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியிருந்தது. மேலும், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் வெனிசுலா குற்றவாளிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் தூதர் ரிச்சார்டு க்ரெனெல் வெனிசுலா தலைநகர் கர்கஸில் அதிபர் நிகோலஸ் மதுரோவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இது மரியாதைக்குரிய சந்திப்பாக அமைந்ததாக வெனிசுலா நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: தென் கொரியா: தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ!

இதனைத் தொடர்ந்து, அதிபர் டிரம்பின் தூதர் ரிச்சார்டு க்ரெனெல் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விடுவிக்கப்பட்ட 6 அமெரிக்க பிணைக் கைதிகளுடன் விமானத்தில் நாடு திரும்பும் புகைப்படத்தை இன்று (பிப்.1) வெளியிட்டுள்ளார்.

ஆனால், வெனிசுலா சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் நீல நிற உடையில் காட்சியளித்த 6 அமெரிக்கர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், 6 பேர் நாடு திரும்பியதற்கு அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜன.31 அன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இந்த சந்திப்பினால் அதிபர் மதுரோவை அமெரிக்க அங்கீகரித்ததாக அர்த்தமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments