மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 35, 400 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 35, 400 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியிலிருந்து வினாடிக்கு 35,400 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 35,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The water inflow into Mettur Dam increased to 35,400 cubic feet per second on Saturday morning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.