FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைப் பற்றி...

Updated On : 22 மார்ச் 2025, 3:08 pm IST
தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகிர்:

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று (மார்ச் 21) மாலை 3 மணியளவில் காட்டுத் தீ உருவாகி அப்பகுதி முழுவதும் பரவியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் தீயணைப்புப் படையினர் அந்த தீயை அணைக்க கடுமையாக போராடி வரும் நிலையில் இன்று (மார்ச் 22) மாலை 3 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) 65 சதவிகித நெருப்பு அணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சுமார் 290 ஹெக்டேராக விரிவடைந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இன்று (மார்ச் 22) மாலை சூரியன் மறைவதற்கு முன்னால் தேவையான அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி அந்த காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு மீட்புப் படைகளுக்கு தென் கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சங்-மோக் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் சீனா! தைவான் கடும் கண்டனம்!

மேலும், இந்த காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, நேற்று (மார்ச் 21) காட்டுத் தீ ஏற்பட்டவுடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த 213 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள ஆராய்ச்சி மையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

அதில், காட்டுத் தீயினால் உண்டான புகையை சுவாசித்ததினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்டுத் தீயை முழுவதுமாக அணைத்த பின்னர் அது உண்டானதற்கான காரணம் குறித்த விசாரணையை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments