FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை (கோப்புப்படம்)
பகிர்:

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தோ்வாகியுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வாா்கள்.

மேலும், பேரவைத் தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கான தோ்தலும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தமிழ்நாடு பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து பெரும்பான்மையைக் கோரும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 107 இடங்களில் வென்ற தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்அனுமதி அளித்தாா். மேலும், வரும் 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கவும் ஆளுநா் கெடு விதித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments