முகத்தில் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் மறைய எளிய டிப்ஸ்!
கோடை வெயில் காரணமாகவும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் முகத்தில் அழுக்குகள் தேங்குவதால் கரும்புள்ளிகள், கருமையான திட்டுகள் தோன்றும்.
கோடை வெயில் காரணமாகவும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் முகத்தில் அழுக்குகள் தேங்குவதால் கரும்புள்ளிகள், கருமையான திட்டுகள் தோன்றும்.
குறிப்பாக மூக்கின் இடுக்குகளில் வாயைச் சுற்றி காணப்படும் கருமையை நீக்க இயற்கையான சில வழிமுறைகளை பயன்படுத்தலாம்.
இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடலைமாவு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகிய இரண்டையும் நன்றாகக் கலந்து அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கவும். இதன்பின்னர் 2 டேபிள் ஸ்பூன் அல்லது தேவையான அளவுக்கு காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.
Advertisement
Advertisement
இப்போது இதனை முகத்தில் கருமை உள்ள பகுதிகளில் அல்லது முகம் முழுவதுமே பேக் போடவும். சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை தேய்த்து கழுவவும். இவ்வாறு செய்துவர இரு நாள்களிலேயே நீங்கள் மாற்றத்தை உணர முடியும். கருமைப் பகுதி மறைவதுடன் முகம் பொலிவு பெறும்.
பால் மற்றும் தேன் கலந்த கலவையைக் கொண்டு முகத்தில் கருமைப் பகுதிகளை மசாஜ் செய்வதும் சிறந்த பலனைத் தரும். இதுதவிர வெறுமனே ரோஸ் வாட்டர் கொண்டும் மசாஜ் செய்யலாம்.
இதையும் படிக்க | தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.