FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பொடுகுத் தொல்லையா? ஒரே சிறந்த வழி இதுதான்!

தலைமுடிதலைமுடியை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை ஏற்படும். குறிப்பாக தலையில் அழுக்கு சேர்ந்தால் பொடுகுத் தொல்லை வரும். யை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் கண

Updated On : 29 நவம்பர் 2022, 6:03 pm IST
பகிர்:

தலைமுடியைப் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. சுற்றுச்சுழல் மாசு, மன அழுத்தம் உள்ளிட்ட புறக் காரணிகளாலும் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, கெமிக்கல் நிறைந்த தயாரிப்புகளை முடிக்கு  பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களாலும் தலைமுடி உதிர்தல், பொடுகுத் தொல்லை ஆகியவை ஏற்படுகிறது. 

தலைமுடியை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை ஏற்படும். குறிப்பாக தலையில் அழுக்கு சேர்ந்தால் பொடுகுத் தொல்லை வரும். பொடுகினால் முடி உதிரும். 

எனவே, வாரத்திற்கு இருமுறையாவது தலைக்கு குளிக்க வேண்டும், தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும், அவ்வப்போது மசாஜ் செய்வது என பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 

Advertisement

Advertisement

இந்நிலையில் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை என முடி சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக இருப்பது வெங்காயச் சாறு. 

வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அவற்றை அரைத்து சாறு பிழிந்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த சாற்றை தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கலாம். 

வாரம் இருமுறை இவ்வாறு செய்துவர விரைவில் பொடுகுத் தொல்லை போய்விடும். 

வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் கலவை ஒரு நல்ல கிருமிநாசினியாக செயல்படுகிறது. இது, இள நரையையும் தடுக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments