FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தலையில் பொடுகு இருந்தால் எண்ணெய் தடவலாமா? முடி உதிர்தலுக்கு என்ன தீர்வு?

பொடுகினால் தலைமுடி உதிர்தல் பிரச்னை பற்றி...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:25 pm IST
கோப்புப் படம் - ANI
பகிர்:

சிலருக்கு தலையில் அதிக பொடுகு காரணமாக முடி உதிர்தல் அதிகம் இருக்கும். அப்போது பொடுகைக் கட்டுப்படுத்தவும் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் அதிகமாக தலையில் எண்ணெய் தேய்ப்பதுண்டு.

ஏன், முடி வறட்சியாக இருந்தாலும் சரி, முடி உதிர்ந்தால் சரி தலையில் எண்ணெய் தடவ வேண்டும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது.

உண்மையில் பொடுகு அதிகம் இருக்கும்போது அதிகமாக எண்ணெய் தடவக் கூடாது.

Advertisement

Advertisement

பொடுகு என்பது உச்சந்தலையில் உருவாகும் மலாசீசியா (Malassezia) என்ற ஈஸ்ட் பூஞ்சை என்றும் அது உச்சந்தலையில் உள்ள எண்ணெய்யைத்தான் உணவாக உட்கொள்கிறது என்றும் கூறப்படுகிறது.

எனவே, பொடுகு அதிகம் இருக்கும்போது மேலும் எண்ணெய் தடவுவது அந்த நிலையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.

அதற்காக நீங்கள் எண்ணெய் முற்றிலுமாக தடவக் கூடாது என்று அர்த்தமல்ல. சில குறிப்பிட்ட எண்ணெய்களைத் தவிர்க்கலாம்.

அதிக அடர்த்தி கொண்ட தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

என்ன செய்யலாம்?

உங்களுடைய தலை மற்றும் தலைமுடி வறட்சியாக இருப்பது போன்று உணர்ந்தால் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக சிறிது எண்ணெய் தடவி விட்டு குளிக்கலாம். தொடர்ச்சியாக தலையில் எண்ணெய் வைத்திருக்க வேண்டாம்.

தொடர்ந்து பொடுகு இருந்தால் அந்த பொடுகை அகற்ற முயற்சிக்க வேண்டும். பொடுகு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும். தலையில் அதிக அழுக்கு சேர்ந்தால், சரியாக தலைமுடியை பராமரிக்காததால், சில தயாரிப்பு பொருள்களால் வரலாம். கண்டுபிடிக்க முடியவில்லை எனில் சம்மந்தப்பட்ட நிபுணரை அணுக வேண்டும்.

ஆன்டி - டேன்ட்ரஃப் என்றும் பொடுகைக் குறைக்கும் அதிக ரசாயனம் இல்லாத தயாரிப்புகளைத் தேர்வு செய்யலாம். நிபுணரை கலந்தாலோசித்து தயாரிப்புகளைப் பயன்படுத்துவது சிறந்தது. பொடுகைக் குறைத்தபின்னர் தலையில் தொடர்ந்து எண்ணெய் தடவலாம்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

summary

Hair care beauty tips: Can apply oil on scalp if have dandruff

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments