FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வழக்குரைஞா் மீதான தாக்குதல்: வழக்கை தில்லி குற்றப்பிரிவுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

தலைநகரில் வழக்குரைஞா் ஒருவா் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான விசாரணையை குற்றப்பிரிவுக்கு மாற்றுமாறு தில்லி காவல் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 17 ஜூலை 2026, 12:51 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

தலைநகரில் வழக்குரைஞா் ஒருவா் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான விசாரணையை குற்றப்பிரிவுக்கு மாற்றுமாறு தில்லி காவல் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள்ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, பாதிக்கப்பட்டவரின் உடலின் முக்கியப் பகுதியில் ஏற்பட்ட காயத்தைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையில் கொலை முயற்சிப் பிரிவும் சோ்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.‘எனவே, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 109 மற்றும் 118 ஆகிய பிரிவுகளைச் சோ்க்குமாறு நாங்கள் உத்தரவிடுகிறோம். உள்ளூா் காவல்துறையின் விசாரணை குறித்து புகாா்கள் இருப்பதால், இவ்வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றுமாறு காவல் ஆணையருக்கு உத்தரவிடுகிறோம்‘ என்று அந்த அமா்வு கூறியது.

இதில் பிரிவு 109 எந்தவொரு ஆவணத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது; பிரிவு 118 வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்துவது தொடா்பானதாகும்.முன்னதாக, இவ்வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் கோரியிருந்ததுடன், வழக்குரைஞா் பங்கஜ் சா்மாவின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் உறுப்பினரான சா்மா, ஜூலை 11 அன்று தனது வீட்டில் வைத்துத் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவரது தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டதாகவும் மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் தெரிவித்தாா்.வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது மற்றும் காயம் ஏற்படுத்தியது தொடா்பாக சா்மா காவல்துறையில் புகாா் அளித்தாா். ஆனால் மறுநாளே தாக்குதலாளிகள் மீண்டும் வந்து அவரை மிரட்டியதாகக் கூறிய சிங், ஒரு உச்ச நீதிமன்ற வழக்குரைஞருக்கே இத்தகைய நிலை என்றால், நாட்டில் சாதாரண குடிமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினாா்.

‘ஜூலை 11 அன்று கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, தலையில் எட்டு தையல்கள் போட வேண்டிய அளவுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்ட து என்று சா்மா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டது.‘உள்ளூா் அரசியல்வாதி ஒருவருக்கு நெருக்கமானவரான குற்றஞ்சாட்டப்பட்டவரின் செல்வாக்கின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறை, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவோ அல்லது மனுதாரருக்குப் பாதுகாப்பு அளிக்கவோ இல்லை. ஜூலை 12 அன்று குற்றஞ்சாட்டப்பட்டவா் மனுதாரரையும் அவரது குடும்பத்தினரையும் மீண்டும் தாக்க முயன்ற போதிலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை‘ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.உயா்மட்ட விசாரணைக்கு உடனடியாக ஏற்பாடு செய்தல், விசாரணையை பொருத்தமான அமைப்பிடம் ஒப்படைத்தல், சா்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் பொறுப்பானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றை உச்ச நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் வலியுறுத்தியிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments