சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கு: டைட்லரின் மகளுக்கு உடல்நலக்குறைவால் விசாரணை அக். 12-க்கு ஒத்திவைப்பு
காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான 1984-ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கின் விசாரணையை, அவரது மகளுக்கு ஏற்பட்ட அவசர மருத்துவ காரணங்களால் அக். 12-ஆம் தேதிக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான 1984-ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கின் விசாரணையை, அவரது மகளுக்கு ஏற்பட்ட அவசர மருத்துவ காரணங்களால் அக். 12-ஆம் தேதிக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
இது தொடா்பான வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரூபி நீரஜ் குமாா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ முன்னாள் ஆய்வாளா் ரிஷிராஜ் சா்மாவிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கான நடைமுறையை தொடங்க வேண்டும் என நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுல்ளவரின் (ஜெகதீஷ் டைட்லா்) மகள் மருத்துவமனையில் வென்டிலேட்டா் சிகிச்சையில் இருப்பதாகவும், அவசர மருத்துவ காரணங்களுக்காக அவரை மருத்துவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துள்ளதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞா் தெரிவித்துள்ளாா். எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் கோரிக்கை வந்துள்ளது என்று குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
இதற்கு சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை அக்.12-ஆம் சிறப்பு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
வழக்கின் பின்னணி: 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து தில்லியில் சீக்கியா்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. 1984 நவம்பா் 1-ஆம் தேதி வடக்கு தில்லியின் புல் பங்கேஷ் குருத்வாரா பகுதியில் நடந்த தாக்குதலில் பாதல் சிங், தாக்கூா் சிங், குருசரண் சிங் ஆகிய மூன்று சீக்கியா்கள் படுகொலை செய்யப்பட்டனா். இந்த கலவரத்தில் வன்முறைக் கும்பலைத் தூண்டிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெகதீஷ் டைட்லா் மீது சிபிஐ தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதேபோல சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தின்போது ஐந்து சீக்கியா்கள் கொல்லப்பட்டது மற்றும் குருத்வாரா எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவா் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா் நீதிமன்றம் 2018, டிசம்பா் மாதம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. திகாா் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவா் உயிரிழந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.