FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒரு பறவையின் பயணம் (சென்னை டூ நெதர்லாந்து)

காட்சிப் பதிவுகளை ரசிக்கும் மக்கள் அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் சென்னையிலிருந்து நெதர்லாந்து வரை பயணித்து கிடைத்த அனுபவங்கள் தரப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் கனவை நனவாக்கும் பயணக் கதை இது.

14 செப்டம்பர் 2026, 6:13 pm IST
பகிர்:

ஒரு பறவையின் பயணம் (சென்னை டூ நெதர்லாந்து)-நித்யா ராமதாஸ்; பக். 128; ரூ. 190; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-600 083, ✆ 96003 98660.

காட்சிப் பதிவுகளை ரசிக்கும் மக்கள் அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் சென்னையிலிருந்து நெதர்லாந்து வரை பயணித்து கிடைத்த அனுபவங்கள் தரப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் கனவை நனவாக்கும் பயணக் கதை இது.

அரசு ஊழியராக திருச்சிக்கு செல்லும் நித்யா, அங்கிருந்த சேவை சங்க பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி, கடல் கடந்த நட்புகளையும் உருவாக்கி, அதைத் தொடர்ந்து வளர்த்து, நெதர்லாந்தைச் சேர்ந்த தோழிகளை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து வைக்கிறார். பின்னர், அவர் நெதர்லாந்து சென்று வந்த பயணக் கதைகளை, வழியில் அவர் சந்தித்த அனுபவங்களுடன் படிக்கும்போது நாமும் அந்த நாட்டைச் சுற்றிப் பார்த்த திருப்தி கிடைக்கிறது.

Advertisement

Advertisement

பயணத்தின்போது ஏற்படும் இடர்கள், ஏமாற்றங்கள், திடீர் நட்புகள், அந்நிய தேசத்தில் தமிழ் பேசும் ஒருவரை சந்தித்த போது ஏற்பட்ட உணர்வு போன்றவை அழகாக சொல்லப்பட்டுள்ளது.

நெதர்லாந்து மக்களின் வாழ்க்கை முறை, வீடுகளின் அமைப்பு, ரயில், பேருந்துகளின் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் கண்முன் காட்சிப்படுத்தப்படுவது போல எதார்த்தமாக உள்ளது. நெதர்லாந்து மக்கள் தங்களின் அன்றாட பயணத்துக்கு அதிகம் பயன்படுத்துவது மிதிவண்டியைத்தான் என்ற தகவல் புதுமையாக உள்ளது.

இந்த பயண அனுபவம் ஓசனிச்சிட்டு, பீனிக்ஸ், அன்றில் என பறவைகளின் பெயரில் மூன்று அத்தியாயங்களாக உள்ளன. ஓசனிச்சிட்டு முன்னும் பின்னும் பறந்து தேன் சேகரிக்கும் தன்மை பெற்றவை. அதன் அடிப்படையில், முன்னும் பின்னும் பயணிக்கும் முதல்பகுதி ஓசனிச்சிட்டு, தோற்று மீண்டெழுந்த கதையைச் சொல்வதால் இரண்டாவது பகுதிக்கு பீனிக்ஸ் என்றும், அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்வதால் மூன்றாவது பகுதிக்கு அன்றில் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments