FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சபரிமலை செல்வதற்கு விதித்திருந்த தடை நீக்கம்

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுவிட்டதாக சபரிமலை தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தேவஸ்வம் போர்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கும் கன்னி' மாத பூஜையில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். எனினும் பக்தர்கள் அவர்களின் தனிப்பட்ட வாகனங்களில் நிலக்கல் அடிவார முகாம் வரை மட்டுமே வர இயலும். அதன் பின்னர் கேரள அரசு போக்குவரத்து பேருந்து மூலமாக பம்பை பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவர். கன்னி மாத பூஜைக்காக திறக்கப்படும் கோயில் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை திறந்திருக்கும்.

Advertisement

Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக டாடா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் யாத்திரை நவம்பர் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் பெய்த கனமழையில் பம்பை ஆற்றின் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆற்றுப்படுகையில் இருந்த கடைகளும், கட்டடங்களும் பலத்த சேதமடைந்திருந்ததால் அந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments