FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல்நாளின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை!

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல்நாள் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது.

Updated On : 10 டிசம்பர் 2024, 5:33 pm IST
பாக்ஸிங் டே டெஸ்ட் - படம்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா
பகிர்:

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான முதல்நாள் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது.

ஏற்கனவே, அடிலெய்டு டெஸ்ட்டில் மூன்று நாள்களில் 1,35, 012 ரசிகர்கள் பார்வையிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன?

டிச. 26 முதல் 30 வரை நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படும். இது முதன்முதலாக 1950இல் இங்கிலாந்தும் ஆஸ்திரேலிய அணியும் விளையாடின.

ஆஸ்திரேலியாவில் பொதுவாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.

சாதனை படைக்குமா?

இந்த நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பாக்ஸிங் டே டெஸ்ட்டின் முதல் நாளுக்கான பொதுமக்கள் பிரிவுக்கான அனைத்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. டிச.24ஆம் தேதி இரவு சிறிய அளவிலான டிக்கெட்டுகள் ஐசிசி இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்களுக்காக விற்கப்பட வாய்ப்பிருக்கிறதென கூறியுள்ளது.

இதற்கு முன்பு இந்தியா - ஆஸி. மோதிய டெஸ்ட்டில் 2014-15இல் 1,13, 009 பார்வையாளர்கள் பங்கேற்றதே அதிகபட்சமாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments