FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால்..? ரூ.500 கோடி இழப்பைச் சந்திக்கும் பிசிபி!

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான இழப்பை சந்திக்கும்...

Updated On : 14 நவம்பர் 2024, 6:45 pm IST
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான இழப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அரசிடம் இருந்து அனுமதி பெறாத பிசிசிஐ, 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்லப் போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டி நடத்துவதில் உறுதியாக உள்ளது. இந்திய அணிக்கான போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரத்தில் ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பிசிபி, பிசிசிஐயின் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இவ்விரு அணிகளும் 2012-2013 ஆம் ஆண்டில் கடைசியாக இருதரப்பு போட்டிகளில் விளையாடின. அதன்பின்னர் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டும் விளையாடி வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்தியது. ஆனாலும், இந்தியாவுக்கான போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டன.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, கராச்சி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகிய மூன்று மைதானங்களை அதிக பொருள் செலவில் மேம்படுத்தியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து, சாம்பியன்ஸ் டிராபி பாதிக்கப்பட்டால் அது ஐசிசியின் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவைத் திரும்பப் பெற்றால், அதன் ஐசிசி நிதி கணிசமாகக் குறைக்கப்படலாம். போட்டியை நடத்துவதைத் தவிர்த்து போட்டியை வேறு இடத்துக்கு மாற்றினால் 65 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.500 கோடி) இழக்க நேரிடும்.

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை வெற்றிகரமாக நடத்தி, சாம்பியன்ஸ் டிராபிக்கும் உறுதியளித்துள்ளதால், நாட்டில் பாதுகாப்பு பிரச்னை இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும், பங்கேற்கும் அணிகளுடனான அட்டவணை குறித்து விவாதித்து வருகிறது. பிசிபியும் நாட்டிற்கு வெளியே ஐக்கிய அரபு அமீரகத்தில்கூட நடத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments