முகப்பு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

Updated On : 25 நவம்பர் 2024, 1:38 pm IST
ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - PTI
பகிர்:

பார்டர் - காவஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியவுடன், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பேட்டர்கள் திணறினர்.

238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தனர்.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

ஸ்கோர் விவரம்

முதல் இன்னிங்ஸ்

இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி - 41, ரிஷப் பந்த் - 37 ரன்கள். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் - 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் - 26 ரன்கள். இந்திய அணியின் பும்ரா - 5, ஹர்ஷித் ரானா - 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸ்

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலியாவின் நாதன் லயான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89, மிட்செல் மார்ஷ் 47 ரன்கள். இந்தியாவின் சிராஜ், பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments