FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இது வெறும் ஆரம்பம் மட்டுமே... இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது குறித்து சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து தமிழக வீரர் சாய் சுதர்சன் பேசியுள்ளார்.

24 மே 2025, 8:27 pm IST
சாய் சுதர்சன் (கோப்புப் படம்)
பகிர்:

நிஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து தமிழக வீரர் சாய் சுதர்சன் பேசியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்து வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இது ஆரம்பம் மட்டுமே...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றது வெறும் ஆரம்பம் மட்டுமே எனவும், இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது எனவும் சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தேசிய அணிக்காக விளையாடுவது ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய கௌரவம் என நினைக்கிறேன். இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது சிறப்பான உணர்வையும், மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

என்னுடைய பெற்றோர் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனத் தெரியும். அவர்களுடன் நான் பேசினேன். என்னுடைய பெற்றோர், உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் முகத்தில் என்னால் பார்க்க முடிந்தது. ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே. இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்திய அணிக்காக நான் விளையாடவுள்ளதை நினைத்து எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டிப்பாக மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments