FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

நெதர்லாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் விலகல்!

நெதர்லாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் விலகியுள்ளார்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 4:34 pm IST
புதிய கேப்டன் பாஸ் டி லீட் உடன் ஸ்காட் எட்வர்ட்ஸ் - படம் | நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

நெதர்லாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் விலகியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணியின் கேப்டனாக ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து, நெதர்லாந்து அணியை அவர் 56 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் வழிநடத்தியுள்ளார்.

ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின்போது, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அந்த அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது.

Advertisement

Advertisement

29 வயதாகும் ஸ்காட் எட்வர்ட்ஸ் நெதர்லாந்து அணிக்காக 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2391 ரன்கள் குவித்துள்ளார். 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1316 ரன்கள் எடுத்துள்ளார்.

நெதர்லாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் விலகிய நிலையில், அணியின் புதிய கேப்டனாக பாஸ் டி லீட் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Scott Edwards has stepped down as captain of the Netherlands team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments