FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் விளையாடாதது ஏன்? பயிற்சியாளர் விளக்கம்!

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இரண்டு நாள்கள் ஷுப்மன் கில் விளையாடாதது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பேசியுள்ளார்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 5:46 pm IST
ஷுப்மன் கில் - படம் | AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இரண்டு நாள்கள் ஷுப்மன் கில் விளையாடாதது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹூதுலே பேசியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிராதான போட்டிகள் தொடங்கும் முன்பாக இரு அணிகளும் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின.

இந்தப் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தியது. இந்திய அணியை கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்தினார். பயிற்சியின்போது, கை விரலில் அடிபட்டதால் ஷுப்மன் கில் முதல் இரண்டு நாள்கள் விளையாடவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இரண்டு நாள்கள் ஷுப்மன் கில் விளையாடாதது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹூதுலே பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இரண்டு நாள்கள் ஷுப்மன் கில் விளையாடாது முன்னெச்சரிக்கை நடவடிக்கையே, வேறு ஒன்றும் இல்லை. அவர் மிகவும் நன்றாக உள்ளார். அவர் நன்றாக பயிற்சி மேற்கொள்கிறார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் மிகவும் நன்றாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு மிகவும் தயாராக இருக்கிறார் என்றார்.

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஷுப்மன் கில் 54 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian team's bowling coach has spoken about Shubman Gill not playing during the first two days of the warm-up match against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments