FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஷுப்மன் கில்லுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8 செப்டம்பர் 2026, 7:42 pm IST
ஷுப்மன் கில் (கோப்புப் படம்)
பகிர்:

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியைக் கேப்டனாக வழிநடத்தி வரும் ஷுப்மன் கில், இன்று (செப்டம்பர் 8) அவரது 27-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருதினை வென்ற ஷுப்மன் கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானர்.

Advertisement

Advertisement

இந்திய அணிக்காக இதுவரை ஷுப்மன் கில் 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3043 ரன்கள் குவித்துள்ளார். 67 ஒருநாள் போட்டிகளில் 3379 ரன்களும், 36 டி20 போட்டிகளில் 869 ரன்களும் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட்டில் 11 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் விளாசியுள்ளார்.

இந்திய அணிக்காக மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியைக் கேப்டனாக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷுப்மன் கில், 2025 சீசனில் 650 ரன்களும், 2026 சீசனில் 732 ரன்களும் குவித்தார்.

27-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த ஸ்டோரியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: பிறந்தநாள் வாழ்த்துகள், பிரின்ஸ்! நீங்கள் நாளுக்கு நாள் சிறப்பாக வளர்ந்து வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் பொறுமையுடனும், பொறுப்புடனும் விஷயங்களை அணுகுகிறீர்கள். உங்களது கடின உழைப்பு தொடரட்டும். இந்த ஆண்டு மேலும் உங்களுக்கு வெற்றிகளும், சதங்களும் கிடைக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Former player Yuvraj Singh has extended birthday wishes to Indian team captain Shubman Gill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments