டேடிஸ் ஆர்மியாக மாறிய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி..! சிஎஸ்கே போல சாதிக்குமா?
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஒருவரைத் தவிர அனைவருக்குமே 30 வயதைக் கடந்திருப்பது குறித்து...
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஒருவரைத் தவிர அனைவருக்குமே 30 வயதைக் கடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் அணியின் சராசரி வயது 33. 46-ஆக மாறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியும் இதுபோல அனைவருக்கும் 30 வயது கடந்திருந்த போதிலும் கோப்பை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் கேமரூன் கிரீனைத் (27 வயது) தவிர அனைவருக்கும் 30 வயது கடந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக, வங்கதேசத்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
Advertisement
Advertisement
அடுத்து தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்துடனும் டெஸ்ட் தொடகளிலும் விளையாடுகிறது. இதில் யாருக்கும் காயம் அடையாமல் இருக்குமா என்பது மிகுந்த கேள்விக்குறியாக இருக்கிறது.
நாதன் லயன் 38 வயது, ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட் 37 வயதுடன் மூத்தவர்களாக இருக்க, கேமரூன் கிரீன் 27 வயது, ஜேக் வெதரால்டு, ஜோஷ் இங்லீஷ் 31 வயதில் இளையவர்களாக இருக்கிறார்கள்.
ஆஸி. அணி வீரர்கள் வயது வாரியான விவரம்
கேமரூன் கிரீன் - 27 வயது
ஜோஷ் இங்லீஷ், ஜேக் வெதரால்டு - 31 வயது
மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர் - 32 வயது
பாட் கம்மின்ஸ் - 33 வயது
அலெக்ஸ் கேரி - 34 வயது
ஜோஷ் ஹேசில்வுட் - 35 வயது
மிட்செல் ஸ்டார்க் - 36 வயது
ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட் - 37 வயது
நாதன் லயன் - 38 வயது
The Australian Test team has turned into 'Daddy's Army'—will they achieve success like CSK?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.