FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜோஷ் ஹேசில்வுட்..!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஹேசில்வுட் சாதனை குறித்து...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:00 pm IST
ஜோஷ் ஹேசில்வுட் - AFP
பகிர்:

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி, சிறப்பு வாய்ந்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

டார்வினில் கடந்த ஆக.13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் எடுக்க, தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸி. அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ஓவர்களில் 161/4 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் ஹேசில்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த விக்கெட்டுகளுடன் அவர் டெஸ்ட்டில் 301 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலம் ஆஸி. அணியில் ஒன்பாதாவது வீரராக 300 விக்கெட்டுகள் வீழ்த்திவராக எலைட் பந்துவீச்சாளர்கள் லிஸ்ட்டில் நுழைந்துள்ளார்.

ஆஸி. அணியில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்

708 - ஷேன் வார்னே

568 - நாதன் லயன்

563 - க்ளென் மெக்ராத்

435 - மிட்செல் ஸ்டார்க்

355 - டென்னிஸ் லில்லி.

316 - பாட் கம்மின்ஸ்.

313 - மிட்செல் ஜான்சன்.

310 - பிரட் லீ

301 - ஜோஷ் ஹேசில்வுட்

summary

Hazlewood joins the list of bowlers who have taken 300 wickets in Test cricket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments