FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா..! டாப் 10ல் 5 பந்துவீச்சாளர்கள்!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா குறித்து...

மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணி. - படங்கள்: ஐசிசி, ஏபி
பகிர்:

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். டாப் 10ல் ஐந்து வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-1 என ஆஸ்திரேலிய அணியினர் சமன்படுத்தினர். முதல் போட்டியில் தோல்வியுற்று, இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றனர்.

ஆஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 36ஆவது வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், டாப் 10ல் ஐந்து வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கடைசி போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் மிட்செல் ஸ்டார்க் வென்றது கவனிக்கத்தக்கது.

இந்தியா சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு கீழிறங்கினார். டாப் 10ல் இவரைத் தவிர வேறெந்த இந்திய வீரர்களும் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை

1. மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா

2. ஜஸ்ப்ரீத் பும்ரா - இந்தியா

3. மாட் ஹென்றி - நியூசிலாந்து

4. பாட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா

5. மார்கோ யான்சென் - தென்னாப்பிரிக்கா

6. ககிசோ ரபாடா - தென்னாப்பிரிக்கா

7. ஸ்காட் போலண்ட் - ஆஸ்திரேலியா

8. நோமன் அலி - பாகிஸ்தான்

9. ஜோஷ் ஹேசில்வுட் - ஆஸ்திரேலியா

10. நாதன் லயன் - ஆஸ்திரேலியா

summary

Australia dominates the ICC rankings! Five bowlers in the top 10!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments